Posts

Showing posts from 2015

லைப் இஸ் புயுட்டிபுல்...

லைப் இஸ் புயுட்டிபுல்... கடந்த ஞாயிறு அன்று நான், குமார் ஷா, வினோத் மூவரும் கோவையில் பேசிக் கொண்டிருக்கும் போது குமாருக்கு ஒரு அழைப்பு வந்தது, என்னிடம் "ஜார்ஜ் இவன்கிட்ட பேசு பேசுனதுக்கு அப்புறம் நான் ஒரு கத சொல்றேன்னு சொன்னாரு. குமார் பேசிவிட்டு என்னிடம் கொடுத்தார், நான் பேசிக் கொண்டிருக்கும் போது எப்போ வருவிங்கன்னு கேட்டான், நாங்க அடுத்த வாரம் வருவோம்னு சொன்னேன், அதற்க்கு அவன் "வரும் போது அந்த குட்டி பாப்பாவ கூட்டிட்டு வாங்கனு சொல்லிட்டு போன வச்சிட்டான். நான் குமாரிடம் "யோவ் அவன் யாரோ குட்டி பாப்பாவ கூட்டிட்டு வர சொல்றான்யா" யார் அந்த பாப்பா  என்றேன். ஜார்ஜ் நா அவன ஒரு தடவ தான் பார்த்திருக்கிறேன், அவன் பேரு சூரிய பிரகாஷ் சேலத்துல "கதை சொல்றோம் வாங்க" நிகழ்வில் தான் பாத்தேன், அங்க நா ஒரு கத சொன்னேன், அந்த கத ஒரு குட்டி பாப்பா பத்துன கத, அவன் நிகழ்வு முடிஞ்சதும் என்னோட நம்பர் வாங்கிட்டான், எப்போ லீவ் கெடச்சாலும் எனக்கு ஒரு ரூபா காயின்ல பேசுவான், பேசிட்டு வைக்கும் போது அண்ணா அடுத்த தடவ வரும் போது அந்த குட்டி பாப்பாவ கூட்டிட்டு வாங்கனு சொல்லிட்டு வச்சி...